Chennai Paadal

{ சென்னை பாடல் }

கர்ணனுக்கு யார் செஞ்ச குற்றமோ
இங்க வெய்யில் கொடுமையா அடிக்குது

நிழல தேடி மரத்தடியில ஒளிஞ்சா
அங்க கரும்பு சாரும் இஞ்சி மோரும் கிடைக்குது

போர் அடிச்சு பீச்சு போய் நடந்தா
அங்க மாங்காயும் மிளகா தூளும் விக்குது

எரிச்ச சோளம்
உப்பன்னாசி
தர்பபூசணீ
மிளகாய் பஜ்ஜி

பழுத்த மாம்பழம்
கடல பொறி
இதுக்கு மேல
என்ன வொர்ரி வொர்ரி வொர்ரி

இந்தரனுக்கு யார் மேல கோவமோ
இடியும் மழையும் இங்க ரோட எல்லாம் கிழிக்குது

பிளாஸ்டிக் பை தொப்பி ஜனம் எல்லாம்
நனையாம வீடு திரும்ப துடிக்குது

கார்பொரேசன் குப்ப தொட்டி குள்ள
பசு மாடும் கன்னுக்குட்டியும் மேயுது

டீ கடையில பன்னு தின்னும் ஆள
தெரு நாய் கூட்டம் எல்லாம் ஏக்கத்தோடு பாக்குது

இந்த ஊரு இப்படிதான் மாமா
வேர்தா தொடச்சுக்க
பேஞ்சா ஒலிஞ்சிக்க

பாத்து பாத்து கோவம் வரும் போது
பல்ல கடிசுக்க மெல்ல சிருசுக்க

{ Chennai Paadal }

karnanukku yaar senja kutramo
inga veyil kodumaiya adikuthu

nizhala thaedi marathadiyila olinja
anga karumbuchaarum inji moorum kedaikuthu

bore adichu beach poi nadandhaa
anga maangaiyum melagathoolum vikkuthu

ericha soolam uppannaasi
tharboosini molaga bajji

pazhutha maambazham kadala pori
ithuku mela enna worry worry worry

indranuku yaar mela kovamo
idiyum mazhayum inga roadeh ellam kizhikuthu

plastic pai thoppi janam ellam
nenayaama veedu thirumba thudikuthu

corporation kuppathotti kulla
pasumaadum kannu kuttiyum meyuthu

tea kadayila bun thinnum aala
therunaai kootam ellam aekathoda paakuthu

intha ooru ippadithan mama
vertha thodachukko penja olinjukka

paathu paathu kovam varum bothu
palla kadichuko mella sirichuko

{ Chennai Song }

Wonder who wronged Karna
That the sun is so treacherous here

Searching for shade and hiding under a tree
There is sugarcane juice and ginger buttermilk here

Getting bored and taking a walk on the beach
Raw mangoes and chilli powder are for sale

Roasted corn, salted pineapple
Watermelon, chilli bajji

Ripe mangoes, groundnuts and puff rice,
beyond all this, why worry, worry, worry?

Wonder who Indra is angry with
Lightning and rain are tearing the roads apart

The plastic bag hat wearing crowds
Are trying to get home dry

A cow and her calf
Graze in a corporation garbage can

Crowds of stray dogs look longingly
At a man eating bun at a tea shop

This city is like this only mama
Wipe if you sweat, hide if it pours

If you get angry when you see all this
Clench your teeth and smile slowly

Pirai Kadhai


{ பிறை கதை }

பகல் அழிக்க நிலவு தீட்டியதொறு சதி
பகல் இல்லை என்றால் இரவு தான் கதி

பகல் அழிக்க நிலவு தீட்டியதொறு சதி
பகல் இல்லை என்றால் இரவு தான் கதி

விண்மீன் படை திரட்டி நிலவும் ஒரு வேளை
கதிரவனை துரத்தி இருள் அழைத்து வந்தது ஒரு மாலை

விண்மீன் படை திரட்டி நிலவும் ஒரு வேளை
கதிரவனை துரத்தி இருள் அழைத்து வந்ததொறு மாலை

பகல் அழிக்க நிலவு தீட்டியது ஒரு சதி
பகல் இல்லை என்றால் இரவு தான் கதி

பகல் அழிக்க நிலவு தீட்டியதொறு சதி
பகல் இல்லை என்றால் இரவு தான் இரவு தான் இரவு தான் இரவு தான் இரவு தான்

வானை ஆண்ட நிலவும் பூமி வலம் வந்து
அடர்ந்த காட்டின் இடையே குளத்தில் தன் பிம்பம் கண்டு

வானை ஆண்ட நிலவும் பூமி வலம் வந்து
அடர்ந்த காட்டின் இடையே குளத்தில் தன் பிம்பம் கண்டு

பகல் போலே தானும் ஒளி கொண்டதென்று
வெக்கம் கொண்டு
மறைய சென்று

பகல் அழிக்க நிலவு தீட்டியது ஒரு சதி
பகல் இல்லை என்றால் இரவு தான் கதி

பகல் அழிக்க நிலவு தீட்டியது ஒரு சதி
பகல் இல்லை என்றால் இரவு தான் கதி

{ Pirai kadhai }

pagal azhikka nilavu theetiyathoru sadhi
pagal illai endral iravuthaan kadhi

pagal azhikka nilavu theetiyathoru sadhi
pagal illai endral iravuthaan kadhi

vinmeen padai thiratti nilavum oru velai
kadhiravanai thurathi irul azhaithu vandhadhoru maalai

vinmeen padai thiratti nilavum oru velai
kadhiravanai thurathi irul azhaithu vandhadhoru maalai

pagal azhikka nilavu theetiyathoru sadhi
pagal illai endral iravuthaan kadhi

pagal azhikka nilavu theetiyathoru sadhi
pagal illai endral iravuthaan iravuthaan
iravuthaan iravuthaan iravuthaan

vaanai aanda nilavum boomi valam vandhu
adarndha kaattin idaye kulathil than bimbam kandu

vaanai aanda nilavum boomi valam vandhu
adarndha kaattin idaye kulathil than bimbam kandu

pagal pole thaanum oli kondathendru
vekkam kondu
maraya sendru

pagal azhikka nilavu theetiyathoru sadhi
pagal illai endral iravuthaan kadhi

{ Moon Story }

The moon plotted to destroy the day
If there is no day, night is the only option

The moon plotted to destroy the day
If there is no day, night is the only option

One evening, the moon gathered an army of stars
Chased the sun away and brought night

One evening, the moon gathered an army of stars
Chased the sun away and brought night

The moon plotted to destroy the day
If there is no day, night is the only option

The moon plotted to destroy the day
If there is no day, night is the only option

The moon that ruled the sky
Came around the earth
And inside a dense forest
Saw its reflection in a lake

The moon that ruled the sky
Came around the earth
And inside a dense forest
Saw its reflection in a lake

Thinking that it too was bright like the sun
The moon got shy and went to hide

The moon plotted to destroy the day
If there is no day, night is the only option

The moon plotted to destroy the day
If there is no day, night is the only option

Karpanai Kadathal

{ கற்பனை கடத்தல் }

​என் கற்பனையை திரட்டி
கவியாய் உன் செவியை நோக்கி விரட்டி
புரட்சி என்னும் பஞ்சால் உன்னை உடுத்தி
மெல்ல கொளுத்தி
உன் கற்பனையை கடத்தினால்
என்னை கவனிப்பாயா
அல்ல மீண்டும் மறுப்பாயா

பயம் உன்னை துரத்தி
நீ தேடி துளைந்து தடுக்கி
விதி செய்த சதியால் விழுந்தால்
என் கரங்கள் தாங்கி எழுந்தால்
என்னை கவனிப்பாயா
அல்ல மீண்டும் மறுப்பாயா

{ Karpanai Kadathal }

en karpanaiyai thiratti
kaviyaai un seviyai nokki veratti
puratchi enum panjaal
unnai uduthi
mella koluthi
un karpanaiyai kadathinaal
ennai gavanippaaya
alla meendum maruppaya

bayam unnai thurathi
ne thaedi thulaindhu thadukki
vidhi seitha sadhiyaal vizhundhaal
en karangal thaangi ezhundhaal
ennai gavanippaaya
alla meendum maruppaya

{ Smuggling Imagination }

If I gather my imagination
And chase it to your ears as a poem
If I dress you in the cotton of revolution
And slowly set you on fire
If I smuggle your imagination
Will you notice me
Or deny me again

If fear chases you
You seek, get lost and trip
If by the plotting of fate, you fall
Hold my hands and get up
Will you notice me
Or deny me again

Pachai Perundhu

{ பச்சை பேருந்து }

பச்சை பேருந்தில்
ஜன்னல் ஓரம் அமர்ந்து

வீசும் காற்றை
கூந்தலிலே உணர்ந்து

பச்சை பேருந்தில்
ஜன்னல் ஓரம் அமர்ந்து

வீசும் காற்றை
கூந்தலிலே உணர்ந்து

ஒரு நொடி
எங்கு போகிறாய்
என்று மறந்தால்
மறுநொடி எங்கேயும்
போகலாம்

ல ல ல

முனிவரிடம் சென்று
பறக்க கற்க நின்று
வணங்கிக் குனிந்து
கற்று தா என்று

முனிவரிடம் சென்று
பறக்க கற்க நின்று
வணங்கி குனிந்து
கற்றுத்தா என்று

ரக்கை முளைத்து வா கண்ணா
என்று முனிவர் கூற
ரக்கை முளைத்தால்
பறக்க கற்கலாம்

ல ல ல

ல ல ல

{ Pachai Perundhu }

pachai perundhil
jannal oram amarndhu
veesum kaatrai
koondhalile unarndhu

pachai perundhil
jannal oram amarndhu
veesum kaatrai
koondhalile unarndhu

oru nodi engu pogirai
endru marandhaal
maru nodi
engeyum pogalam

la la la

munivaridam sendru
parakka karka nindru
vanangi kunindhu
katru thaa endru

munivaridam sendru
parakka karka nindru
vanangi kunindhu
katru thaa endru

rakkai mulaithu va kanna
endru munivar koora
rakkai mulaithaal
parakka karkalam

la la la

la la la
la la la

{ Green Bus }

Sitting in the green bus
By the window
Feeling the blowing wind
In hair

Sitting in the green bus
By the window
Feeling the blowing wind
In hair

If you forget for a moment where you are headed
You are free to go anywhere

la la la

Went to a sage
Waited to learn how to fly
Bowed respectfully
And asked “Teach me to fly”

Went to a sage
Waited to learn how to fly
Bowed respectfully
And asked “Teach me to fly”

“Grow a pair of wings and return child” the sage says
If you can grow wing, you can learn to fly

la la la
la la la
la la la

Maanda Mannan Kaviyam

{ மாண்ட மன்னன் காவியம் }
நானும் ஒரு வீரன்தான்
வார்த்தைகள் என் கோள்
என் பின்னே படை திரண்டால்
என் முன்னே போர்

அச்சம் ஒரு வார்த்தையா
தெரியவே இல்லை
என் எதிரி ஓட்டமும்
புரியவே இல்லை

அமர்ந்த இடத்தில் இருந்து
புரட்சித் துவப்பேன்
என் முகம் கொண்ட கொடிகள்
ஊரில் நடுவேன்

ஆயிரம் அம்புகள்
வானை கிழிக்கும்
என் பெயர் சொல்லிப் பாரு
காற்றில் மிதக்கும்

நான் முகக்கண்ணாடி பார்த்தால்
பழைய அரசன் தோன்றுகிறான்
என் ஆணவ குரலை கேட்டால்
அவனும் சேர்ந்தே ஒலிக்கிறான்

என் வாழ்வில் ஒவ்வொரு நொடியும்
மாண்ட மன்னன் காவியம்
வாழ்ந்த மன்னன் காவியம்
மாண்ட மன்னன் காவியம்

போர்களம் சென்று வந்து சினம் கொண்டேன்
நாடை ஆள ஆசை கொண்டு மன்னன் கொன்றேன்
போர்களம் சென்று வந்து சினம் கொண்டேன்
நாடை ஆள ஆசை கொண்டு
மன்னன் கொன்றேன்

நான் முகக்கண்ணாடி பார்த்தால்
பழைய அரசன் தோன்றுகிறான்
என் ஆணவ குரலைக் கேட்டால்
அவனும் சேர்ந்தே ஒலிக்கிறான்

என் வாழ்வில் ஒவ்வொரு நொடியும்
மாண்ட மன்னன் காவியம்
வாழ்ந்த மன்னன் காவியம்
மாண்ட மன்னன் காவியம்

​​{ Maanda Mannan Kaviyam }

naanum oru veeranthaan
varthangal en kol
en pinne padai thirandaal
en munne por

acham oru varthaiya
theriyave illai
en ethiri ottamum
puriyave illai

amarndha edathil irundhu
puratchi thuvappaen
en mugam konda kodigal
uril naduven

aayiram ambugal
vaanai kizhikum
en peyar solli paaru
kaatril medhakum

naan mugakkannadi paarthaal
pazhaiya arasan thondrugiran
en aanava kuralai kaettal
avanum sernthe olikiran

en vazhvil ovvoru nodiyum
maanda mannan kaviyam
vazhandha mannan kaviyam
maanda mannan kaviyam

porkalam sendru vandhu
sinam konden
naadai aala aasai kondu
mannan kondren

porkalam sendru vandhu
sinam konden
naadai aala aasai kondu
mannan kondren

naan mugakkannadi paarthaal
pazhaiya arasan thondrugiran
en aanava kuralai kaettal
avanum sernthe olikiran

en vazhvil ovvoru nodiyum
maanda mannan kaviyam
vazhandha mannan kaviyam
maanda mannan kaviyam

{ The Dead King’s Tale }

I too am a warrior
Words are my device
Once the army is behind me
War is ahead of me

Is fear a word?
I wasn’t aware
My enemies’ hasty retreat,
I do not understand

From where I am seated
I will start a revolution
Flags bearing my face
Will fly throughout the nation

A thousand arrows
Will tear the sky
Just say my name
They will float in the air

When I look at the mirror
The old king appears
When I hear my arrogant voice
The old king also echoes

Every moment of my life is
The dead king’s tale
The tale of the king who lived
The dead king’s tale
Upon returning from the battlefield
I was angry
Desiring to rule the nation
I killed the king

Upon returning from the battlefield
I was angry
Desiring to rule the nation
I killed the king

Every moment of my life is
The dead king’s tale
The tale of the king who lived
The dead king’s tale

Ulagathin Sondhakaran

{ உலகத்தின் சொந்தக்காரன் }

என் பாதம் பதியும்
உறுதி பாரு
அதன் போக்கில் கிளம்பும்
புழுதி பாரு

என் பாதம் பதியும்
உறுதி பாரு
அதன் போக்கில் கிளம்பும்
புழுதி பாரு

உலகம் எனது
என்பதில் சந்தேகமா
உலகம் எனது
என்பதில் சந்தேகமா

உனக்கும் எனக்கும் மட்டும்
மரணம் இல்லை
உனக்கும் எனக்கும் மட்டும்
இளமை ஓயாது

உனக்கும் எனக்கும் மட்டும்
மரணம் இல்லை
உனக்கும் எனக்கும் மட்டும்
காலம் ஓடாது

உன் கண்ணில் உள்ள
தெளிவை பாரு
அதை கண்டு வழி விட்டவர்
நூறு நூறு

உன் கண்ணில் உள்ள
தெளிவை பாரு
அதை கண்டு வழி விட்டவர்
நூறு நூறு

உலகம் உனது
என்பதில் சந்தேகமா
உலகம்உனது
என்பதில் சந்தேகமா

உனக்கும் எனக்கும் மட்டும்
மரணம் இல்லை
உனக்கும் எனக்கும் மட்டும்
இளமை ஓயாது

உனக்கும் எனக்கும் மட்டும்
மரணம் இல்லை
உனக்கும் எனக்கும் மட்டும்
காலம் ஓடாது

*

{ Ulagathin Sondhakaran }

en paadham padhiyum
uruthi paaru
adhan pokkil kilambum
puzhuthi paaru

en paadham padhiyum
uruthi paaru
adhan pokkil kilambum
puzhuthi paaru

ulagam enathu
enbathil sandhegama
ulagam enathu
enbathil sandhegama

unakum enakum mattum
maranam illai
unakum enakum mattum
ilamai oyathu

unakum enakum mattum
maranam illai
unakum enakum mattum
kaalam odathu

un kannil ulla
thelivai paaru
adhai kandu vazhi vittavar
nooru nooru

un kannil ulla
thelivai paaru
adhai kandu vazhi vittavar
nooru nooru

ulagam unathu
enbathil sandhegama
ulagam unathu
enbathil sandhegama

unakum enakum mattum
maranam illai
unakum enakum mattum
ilamai oyathu

unakum enakum mattum
maranam illai
unakum enakum mattum
kaalam odathu

*

{ Man Who Owns The World }

Look at the firmness
in my steps
Look at the dust
in my wake

Look at the firmness
in my steps
Look at the dust
in my wake

Is there any doubt
that the world is mine
Is there any doubt
that the world is mine

For you and me alone
there is no death
For you and me alone
youth will never end

For you and me alone
there is no death
For you and me alone
time will not rush

Look at the clarity in your eyes
on seeing which
Hundreds and hundreds
have made way for you

Look at the clarity in your eyes
on seeing which
Hundreds and hundreds
have made way for you

Is there any doubt
that the world is yours
Is there any doubt
that the world is yours

For you and me alone
there is no death
For you and me alone
youth will never end

For you and me alone
there is no death
For you and me alone
time will not rush
​​